உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு

திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும், தீமிதி திருவிழாவில், நேற்று, அர்ச்சுனன் தபசு நடந்தது. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள, திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த 23ம் தேதி முதல், நடந்து வருகிறது. தினசரி காலை, மாலை இரு வேளைகளில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இரவு உற்சவர் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. இதுதவிர, மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மகாபாரத நாடகமும், இரவு நாடகமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு அர்ச்சுனன் தபசு நாடகம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அர்ச்சுனன் தவம் வேடம் பூண்டு, கோவில் எதிரில் அமைக்கப்பட்டுள்ள, பனை மரத்தில் தபசு ஏறினார். அப்போது திரளான பெண் பக்தர்கள், அங்கு கூடியிருந்த வழிபட்டனர். மேலும், நேற்று காலை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டினர். இந்நிகழ்ச்சியில் திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !