கச்சபேஸ்வரர் கோவிலில் முருக்கடி சேவை உற்சவம்!
ADDED :3910 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தில், முருக்கடி சேவை உற்சவம், நேற்று முன்தினம் இரவு, வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம், சுந்தாரம்பிகை உடனுரை கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை பிரமோற்சவம், கடந்த மாதம் 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன், ஒன்பதாம் நாள் உற்சவமான, முருக்கடி சேவை விழா, நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருக்கடி சேவையில், கச்சபேஸ்வரர் மற்றும் சுந்தராம்பிகை எழுந்தருளினர். ராஜவீதிகளில் பவனி வந்த தேரை, பக்தர்கள் வடம் பிடித்து சென்றனர்.