ஜுன் 1, 2ல் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா!
ADDED :3807 days ago
திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, ஜுன் 1, 2ல் நடக்கிறது. இன்று, தேர்க்கால் பூஜை நடக்கிறது. திருப்பூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள விஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில் ஆண்டு திருவிழாவாக வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருவிழா, வரும் 27ல் துவங்குகிறது. ஜுன் 1ல், விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம், 2ல், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இரு கோவில் தேர்களையும் தயார்படுத்தி, அலங்கரிக்கும் பணிக்காக, இன்று காலை, 9:00 மணிக்கு, தேர்க்கால் பூஜை நடத்தப்படுகிறது.