ராமபரதேசி சுவாமி ஜீவபீடத்தில் இன்று குரு பூஜை விழா
ADDED :3808 days ago
வில்லியனுார்: வில்லியனுார் மூலக்கடையில் அமைந்துள்ள ராமபரதேசி சுவாமி ஜீவ பீடத்தில், குரு பூஜை விழா இன்று நடக்கிறது. குரு பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 6:30 மணிக்கு சிவனடியார் திருக்கூட்டம் சார்பாக, ராமபரதேசி சுவாமிகள் உருவப்படம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. குரு பூஜையான இன்று (6 ம்தேதி) காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவடிப் புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி ஆன்மிக வழிபாட்டு சபையினரின் பாராயணம் நடைபெறுகிறது. காலை 10:30 சிறப்பு பூஜை, பகல் 12:00 மணிக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 5:30 மணியளவில் சித்தரிஷி ஞானிகளின் பக்தி பாடல் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை சத்குரு ராமபரதேசி சுவாமிகள் சேவா டிரஸ்டியினர் செய்துள்ளனர்.