அக்னீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு!
ADDED :3808 days ago
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. வசந்த மண்டபத்தில், பஞ்ச மூர்த்திகளுக்கு மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, கோவில் வலம் வந்து தந்தனர். இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் அக்னி தீர்த்தத்திலும், காவிரியிலும் தீர்த்தவாரி நடந்தது.