உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முடியனூர் தூக்கு தேர்திருவிழா பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

முடியனூர் தூக்கு தேர்திருவிழா பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

தியாகதுருகம் : முடியனூர் திரவுபதியம்மன் கோவில் தூக்கு தேர் திருவிழா நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த முடியனூரில் உள்ள நூற்றாண்டு பழமையான திரவுபதியம்மன் கோவில் திருவிழா கடந்த 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை திரவுபதியம்மன், அர்ஜூனன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பஞ்ச பாண்டவர்கள் சிலை தேரில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.வழக்கமான முறைப்படி இல்லாமல், இக்கோவில் தேர் 61 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் கூடி தோளில் சுமந்து ஊர்வலமாக செல்வது சிறப்பு அம்சம். இம்முறைப்படி அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் சுமந்து கோவிந்தா கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இன்று (8ம்தேதி) காலை மீண்டும் ஒருமுறை தேர் ஊர்வலம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கோவில் எதிரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து தீமிதி திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !