உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எறையூர் தேவாலயத்தில் திருவிழா கொடியேற்றம்!

எறையூர் தேவாலயத்தில் திருவிழா கொடியேற்றம்!

உளுந்துார்பேட்டை: எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் தேரோட்ட விழா கொடியேற்றம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம்,  உளுந்துார்பேட்டை தாலுகா எறையூரில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த புனித ஜெபமாலை அன்னை ஆலயம் அமைந்துள்ளது.  இக்கோவில் தேர் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்தாண்டு தேரோட்டம்  குறித்து, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., பாரதிதேவி தலைமையில் நேற்று முன்தினம் மாலை சமாதான கூட்டம் நடந்தது. இதில், வரும்  30ம் தேதி தேரோட்டம், தேவாலய வளாகத்திற்குள் நடத்த, ஆர்.டி.ஓ., பாரதிதேவி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று மாலை 6: 50  மணிக்கு தேவாலய வளாகத்திற்குள்ளாகவே சிறிய தேர் வலம் வந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !