உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரவர்த்தி திருமகன் கோவிலில் கும்பாபிஷேகம்!

சக்கரவர்த்தி திருமகன் கோவிலில் கும்பாபிஷேகம்!

புதுச்சத்திரம்: சம்பாரெட்டிப்பாளையம் சக்கரவர்த்தி திருமகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 19ம் தேதி மாலை  அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. 20ம் தேதி மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 21ம் தேதி  காலை 8:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மாலை நான்காம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. கடந்த 22ம் தேதி  காலை 6:00  ஐந் தாம் கால யாகசாலை பூஜை, 7:00 மணிக்கு யாத்ராதானம், 9.00 மணிக்கு கடம் புறப்பாடாகி  9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில்  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !