சீதா கல்யாண உற்சவம் கோலாகலம்
ADDED :3797 days ago
சேலம் : சேலம், இரண்டாவது அக்ரஹாரம், சங்கராலயம் ரோட்டில் உள்ள ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தின் சார்பில், ஆண்டு தோறும் சீதா கல்யாண மஹோத்ஸவம் நடத்தப்படுவது வழக்கம். சேலம், சிருங்கேரி சங்கரமடத்துக்கு சொந்தமான பாரதி தீர்த்த கல்யாண மண்டபத்தில், சீதா கல்யாண மஹோத்ஸவம், நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, தோடய மங்களம் அஷ்டபதி பஜனை, கர்நாடகா சங்கீதம், திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோத்ஸவம் ஆகியவற்றுடன் துவங்கியது. நேற்று காலை, ஸம்ப்ரதாய உஞ்சவ்ருத்தியை தொடர்ந்து, சீதா கல்யாண உத்ஸவம் துவங்கியது. திருக்கல்யாண முகூர்த்தம், ஆஞ்சநேய உத்ஸவம் மங்கள ஹாரதி ஆகியவற்றை தொடர்ந்து, கல்யாண விருந்து, இசைக்கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, சேலம் சிருங்கேரி சங்கரமட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.