பாகூர் திரவுபதியம்மன் கோவிலில் கொடியேற்றம்
ADDED :3894 days ago
பாகூர்: பாகூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 22ம் தேதி மாலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7.00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் 5ம் தேதி அம் பாள் ஜனனம், 6ம் தேதி அரக்கு மாளிகை எரித்தல், 7ம் தேதி பகாசூரன் வதம், 8ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. வரும் 12ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது. தினமும் மாலையில் இளந்தம்பட்டு கலியமூர்த்தியின் பாரத சொற்பொழிவு நடக்கிறது.