அரியக்குடி கோயில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED :3786 days ago
காரைக்குடி : அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோயில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அரியக்குடி அலர்மேல் மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் திருக்கோயில் தலம் "தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. வைகாசி திருவிழா நேற்று காலை 12.15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி சீதேவி, பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு அம்ச வாகனத்தில் வீதி உலா வந்தார். விழா நாட்களில் காலை 10 மணிக்கும், இரவு 9 மணிக்கும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 2-ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் மகேந்திரன், அறங்காவலர் தலைவர் அழகிய வானப்ப செட்டியார் செய்து வருகின்றனர்.