திண்டிவனம் பெருமாள் கோவிலில் தூய்மைப் பணி
ADDED :3787 days ago
திண்டிவனம்: திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில்,பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பி.ஆர்.எஸ்., துணிக்கடை ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவம், வரும் 30ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு பி.ஆர்.எஸ்., துணிக்கடை உரிமையா ளர் ரங்கமன்னார் தலைமையில், காலை 5:30 மணிக்கு ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ராஜகோபுரம், கருட மண்டபம், கோவில் வளாகம், உட்பட அனைத்து பகுதிகளும் தூய்மை செய்யப்பட்டது. இப்பணியில் 150 பேர் ஈடுபட்டனர். சரத் சந்தர், வைஷ்ணவி, சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காலை 9:30 மணிக்கு பணி முடிந்த பின், அனைவரும் தூய்மை இந்தியா உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.