உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் மல்லிகேஸ்வரி மாரியம்மன் வீதியுலா!

காரைக்கால் மல்லிகேஸ்வரி மாரியம்மன் வீதியுலா!

காரைக்கால்: காரைக்கால் மேலாசாகுடி மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி மாரியம்மன் வீதியுலா நடந்தது. காரைக்கால் மேலகாசாகுடி மல்லிகேஸ்வரி  மாரியம்மன் மற்றும் பத்திரகாளியம்மான் கோவிலில்  கடந்த12ம் தேதி மாரியம்மன் மற்றும் பத்ரகாளியம்மானுக்கு  பூச்சொறிதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று தீமிதி திருவிழாவையொட்டி மாரியம்மனுக்கு பூ அலங்காரம் அபிஷேகம், கஞ்சி வார்த்தல், மாலை சந்தனகாப்பு அலங்காரத்தில் மாரியம்மன் வீதியுலா நடந்தது.இன்று காலை மஞ்சள் விளையாட்டு விழா நடைபெறுகிறது.நிகழ்ச்சிகளை கிராமவாசிகள்,ஆறு கிராமவாசிகள்,நடுத்தர தொழிலாளர் சங்கம்,அனைத்து நற்பணி மன்றங்கள்,சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !