பதினாறு வகையான உபசாரங்கள்!
ADDED :4100 days ago
வினவுசோ டசபூசை யுப்சார முறைபகரின்
மேவுமா வாக னமுடன்
மிக்கவா தனமிலகு பாத்தியம் அருக்கியம்
விதித்தவா சமன மொடுமஞ்
சனவிவித அணியாடை கந்தம்உப வீதமிழை
சாற்றுமலர் தூப தீபம்
தருநிவே தனம்வேள்வி பலிகணித் தியவிழாத்
தாம் இதென நூல் புகன்றாய்
பனகதர கந்தமலர் புகைசுடர் நிவேதனம்
பஞ்சோப சார மென்னப்
பத்தருய மிக்கமறை யாகமபு ராணநூல்
பயில்தர வெடுத்து ரைத்தாய்
தினமுமறை முனிவர்மூ வாயிரத் தவர்பூசை
செய்தக மகிழ்ந்து போற்றும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.