பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றின் அளவு வகைகள்!
ADDED :4155 days ago
கிருதமொரு பங்குததி யிருபங்கு பயமூன்று
கிருதநேர் கோச லமயம்
கிளர்குசைப் புனல்மூ வுழக்கிவை கலந்தே
கேடில் ஈசா னாதியாம்
உருமமுறு சுருதிதரும் பஞ்சகவ் வியமுறையி(து)
ஓங்குமைந்து அமுதம் ஆக்கல்
ஒருநூறு அரம்பையின் கனியதற்கு இருதெங்கு
கண்ட சர்க்கரை யெண்பலம்
தருமூவு ழக்குமது நெய்யதின் இரட்டியிவை
தானெலாம் ஒன்று படவே
சமைவதாம் எனவுமை யவட்குமறை யாகமம்
சாற்றினாய் உலகம் உய்ய
திரிநயன புரதகன சின்மய பராபர
சிவாநந்த அருள்நி தியமே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.