திரவுபதியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3955 days ago
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழாவையொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டில் திரவுபதியம்மன், முத்து மாரியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. தினம் சுவாமிக்கு, அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. கடந்த 29ம் தேதி, சாகை வார்த்தல், செடல் உற்சவம் நடந்தது. நேற்று மதியம் 2.00 மணிக்கு, அர்ஜூனன், திரவுபதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தீமிதி திருவிழா, நாளை (2ம் தேதி) மாலை 6.00 மணிக்கு நடக்கிறது.