பாடலீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :3888 days ago
கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவி லில் ஈசான மூலையில் சிவனுடைய திருக்கரங்களால் உருவாக்கப்பட்ட சிவகர தீர்த்த குளத்தில் ஆலய வழிபடுவோர் சங்கம் சார்பில் உலக நன்மை வேண்டி நேற்று முன்தினம் மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதனையொட்டி துர்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விளக்கு பூஜையில் 650 பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.