வில்வமும் துளபமும் எடுக்கலாகாத நாள்கள்!
ADDED :4146 days ago
மதியுதய தினமுவா இணையொன் பதீரேழு
வளரெட்டு நான்கும் என்ன
வருதிதிகள் சோமவா ரந்தனில் கூவிளம்
மகேசநின் பூசைக் கெடார்
விதிபதமொ டோணஞா யிறுவெள்ளி சேயென்ன
மேவு வாரமு வாவிணை
மிக்கவப ராணமொ டிராக்கால மாலையும்
வியன்து வாதசி யட்டமித்
திதிசதுர்த் தசியுதயம் வைகறைப் பொழுதினும்
சீர்த்துள வெடுத்தல் செய்யார்
சேரும்அறு மதியதனிற் பாதிகூவி ளந்துளவு
சேர்த்துவைத் தருச்சனை செய்வார்
திதியுயிர் படைத்தழித் துத்திரோ பவமருட்
செயல்நடத் தியமு தவ்வனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.