ராஜகோபால சுவாமி அனுமன் வாகனத்தில் உலா!
ADDED :3931 days ago
விருத்தாசலம்: வைகாசி விசாக பிரம்மோற்சவ ஐந்தாம் நாளில், ராஜகோபால சுவாமி அனுமன் வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விரு த்தாசலம் பெரியார் நகர் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியே ற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாள் உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை பரமபதநாதன் திருக்கோலத்தில் பல்லக்கில் உலா, பகல் 12:00 மணிக்கு திருமஞ்சனம், சேவா காலம், சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு ராஜகோபால சுவாமி சமேத கோலத்தில் அனுமன் வாகனத்தில் சேலம் ரோடு, மணலூர், கடைவீதி வழியாக வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.