பட்டத்தரசியம்மன் கோவிலில் கும்பாபிஷேக கொண்டாட்டம்!
உடுமலை : பூளவாடி பட்டத்து அரசியம்மன் கோவில், கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்கிறது. உடுமலை அருகே பூளவாடியில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று மாலை 6:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவங்கியது.இன்று காலை 7:00 மணி முதல், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை, அக்னி சங்கிரஹணம் நடக்கிறது.காலை 10:00 மணிக்கு தீர்த்தம் அழைத்தல், மாலை 5:00 மணி முதல் முதற்கால யாகம், புனித மண் எடுத்தல், புனித நீர் கொண்டு வருதல், பாலிகை இடுதல், காப்பு நாண் அணிதல், திருக்குடங்கள் நிறுவுதல், யாகசாலை பிரவேசம், யாக குண்டத்தில் அம்மனை எழுந்தருள செய்தல் ஆகியவை நடக்கின்றன.
நாளை காலை 7:45 மணிக்கு, இரண்டாம்கால யாகம், யாக மண்டப வழிபாடு, வேதிகார்ச்சனை, பாவனாபிஷேகம், கோபுர கலசம் வைத்தல் நடக்கின்றன. மாலை 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாகம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், காயத்ரீ, மூலமந்திர, வேதமந்திர யாகங்கள், அஷ்ட பந்தனம் நடக்கின்றன.வரும் 7ம் தேதி காலை 5:35 மணிக்கு, நான்காம் கால யாகம், தத்வார்ச்னை, காலை 7:10க்கு, பெருநிறை வேள்வி, தீபாராதனை, 7:30க்கு, திருக்குடங்கள் புறப்பட்டு, கோவிலை வலம் வருகின்றன. காலை 8:00 மணிக்கு, கோபுர விமான கும்பாபிஷேகம், 8:15 மணிக்கு, மூலவர் பட்டத்து அரசியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 9:00 மணிக்கு, தச தரிசனம், தச தானமும், 9:40 மணிக்கு, மகா அபிஷேகம், மகா அலங்காரம், தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு, அம்மன் வீதி உலாவும் நடக்கின்றன. பக்தர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.