உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருதய ஆண்டவர்தேவாலய திருவிழா!

இருதய ஆண்டவர்தேவாலய திருவிழா!

ஊட்டி: ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலய திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு, மறை மாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது.

முன்னதாக, தேவாலய வளாகத்தில் நற்கருணை வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, தினமும் மாலை, 5:30 மணிக்கு, நவநாள் திருப்பலி நடத்தப்பட உள்ளது. வரும், 14ம் தேதி, ஆண்டு பெருவிழா நடத்தப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு குரு ஜான் ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !