அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவம் துவங்கியது
ADDED :5312 days ago
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ரிஷிவந்தியத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. கோவில் குருக்கள் நாகராஜ், சோமு சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்தது. வரும் 12ம் தேதி மதியம் 2.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.