திருமலையில் 12 லட்சம் செம்மரக் கன்றுகள்!
திருப்பதி : திருமலையில், 12 லட்சம் செம்மரக் கன்றுகள் நடப்படும், என, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். திருமலையில், அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது.இதில், அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 18 உறுப்பினர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின், கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:அமெரிக்காவில், நான்கு இடங்களில், சீனிவாச கல்யாண உற்சவம், நடக்க உள்ளது.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், அனந்தவரம் பகுதியில் உள்ள, பழமையான வெங்கடேஸ்வர சுவாமி கோவிலை, தேவஸ்தானம், தன் பொறுப்பில் எடுத்து பராமரிக்க உள்ளது.திருமலையில், 1,220 பக்தர் தங்குவதற்கு வசதியாக, 220 அறைகள் கொண்ட வகுளமாதா ஓய்வு அறை கட்ட, 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.திருமலையில், 900 ஏக்கரில், 22 லட்சம் ரூபாய் செலவில், 12 லட்சம் செம்மரக் கன்றுகள் நடப்படுவதுடன், 7.20 மெகாவாட் திறன் கொண்ட, காற்றாலை மின் நிலையம் நிறுவப்பட இருக்கிறது.சித்துார் தம்பலபள்ளியில், 10 மெகாவாட் திறன் கொண்ட, சூரிய சக்தி மின் நிலையம்; பலமநேருவில், 1,000 ஏக்கரில், கோசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.