உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் ஆனி அமாவாசை நிகும்பலா யாகம்!

பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் ஆனி அமாவாசை நிகும்பலா யாகம்!

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவிஅம்மன்கோவிலில்
அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது.

உளுந்தூர் பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10.30மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. யாக குண்டத்தில் பழவகைகள், நெய் ஊற்றப்
பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் 5 குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது.

பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்றகோரி வெற்றிலையில் எழுதி, யாக குண்டத்தில்
கொட்டி யாகம் வளர்க்கப்பட்டது. யாககுண்டத்தில் ஏராளமான புடவை மற்றும் துணிகள் சாற்றப்பட்டன. தொடர்ந்து பல்வேறு பழ வகைகள், பால், தயிர், நெய் யாக குண்டத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.ஸ்ரீ பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !