உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போளூர் ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 10ல் கோலாகலம்

போளூர் ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 10ல் கோலாகலம்

திருவண்ணாமலை: ரேணுகாம்பாள் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள், கடந்த ஆறாம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. ஏழாம் தேதி நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை மற்றும் முதற்கால யாகபூஜை நடந்தது. ஜூலை 8ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.

9ம் தேதி காலை 8.30 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை, மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால யாகபூஜை நடக்கிறது. 10ம் தேதி காலை 6 மணிக்கு, ஆறாம் கால யாகபூஜை, காலை 9.45 மணிக்கு ரேணுகாம்பாள் அம்மனுக்கும், சோமநாதஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
உணவுத்துறை அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், சென்னை சுந்தரம கிளைட்டன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் வேணுசீனிவாசன், கோவை அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் ரவிராம் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !