உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை!

வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை!

கும்மிடிப்பூண்டி: வரலாற்று சிறப்புமிக்க, அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளத்தை சுற்றி, சுற்றுச்சுவர் அமைத்து, துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கவரைப்பேட்டை அடுத்த, அரியதுறை கிராமத்தில், மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.காசிக்கு நிகராக போற்றி வணங்கப்படும் இத்தலத்தில் உள்ள லிங்கத்தை, ரோம மகரிஷி பிரதிஷ்டை செய்து வணங்கியதாக, வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிறமாநிலத்தை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் வந்து, வணங்கி செல்கின்றனர்.அங்குள்ள திறந்தவெளி கோவில் குளத்தின் ஒரு பகுதியில், படிக்கற்கள் சிதிலமடைந்தும், புதர்கள் மண்டியும் கிடக்கின்றன.இந்து சமய அறநிலையத் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவில் குளத்தை சுற்றி, சுற்றுச்சுவர் அமைத்து, குளத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர் கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !