மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்திய நாய்!
ADDED :3857 days ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கீழ்தம்பலஹள்ளியில் வசிக்கும் தங்கவேல் என்பவர் வளர்த்த நாய் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் போய்விட்டது. நாய் குணமடைந்து பழையபடி நடந்தால் நாயைவிட்டே மாவிளக்கு கொண்டுவந்து போடுவதாக அங்குள்ள மாரியம்மன் கோயிலில் வேண்டிக்கொண்டார். நாயும் குணமாகியது, வேண்டுதலின்படி ஒரு சின்ன வண்டியில் மாவிளக்கை வைத்து அதை நாய் இழுத்துக்கொண்டு போய் கோவிலில் சேர்க்கும்படி உரிமையாளர் செய்தார்.