உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருபெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள்!

குருபெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள்!

மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்

சுமாரான பலன் பெறும் ராசிகள்!

மிதுனம், கன்னி, மீனம்

பரிகார ராசிகள்!

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம்

குரு வணக்கம்-1

மனம் போல் வாழ வியாழ தேவா
தனமும் நலமும் வளமுந் தருவாய்
கோள் தரு கொடுமை தீர்த்தே நன்மை
வேள்வியில் வந்து விரைவுடன் ஈவாய்

குரு வணக்கம்-2

பெருநிறை செல்வம் மேன்மை பெற்றிடும் சுகங்கள் யாவும்
வருநிறை மரபு நீடி வாய்க்கும் சந்ததி தழைக்க
குருநிறை ஆடை ரத்னம் தான் பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள் குரைகழல்   தலைக் கொள்வோமே.

குரு பயோடேட்டா!

திசை    -    வடக்கு
பிடித்த ராசி    -    தனுசு, மீனம்
அதிதேவதை    -    பிரம்மா
பிடித்த நிறம்    -    மஞ்சள்
பிடித்த தானியம்    -    கொண்டைக்கடலை
பிடித்த மலர்    -    வெண்முல்லை
பிடித்த உலோகம்    -    தங்கம்
நைவேத்யம்    -    கடலைப்பொடி சாதம்
வாகனம்    -    யானை
நட்பு கிரகம்    -    சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம்    -    புதன், சுக்கிரன்
மனைவி    -    தாரா
குழந்தைகள்    -    பரத்வாஜர், யமகண்டன், கசன்
தலங்கள்    -    ஆலங்குடி, திருச்செந்துõர்
 பலன்    -    பொருள், கல்வி, புத்திரப்பேறு

குரு ஸ்லோகம்!

குருர் பிரம்ஹா குருர் விஷ்ணுர்
குருர் தேவா மஹேச்வர:
குரு ஸாக்ஷாத் பரம் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !