செபம் செய்தலுக்குரிய ஆசனமும் பயனும்!
ADDED :3861 days ago
கழையாத னத்தில்செபம் புரிந்திடின் வறுமை
கல்லி னால்திட நோய்தரும்
காசினி தனில்துக்க முத்திசீர் எய்திடும்
கான்புலித் தோலி னுறவே
பிழைதவிரு மான்றொக்கின் மெஞ்ஞானம் எய்துமெழில்
பெருகும் கம்பளந் தன்னிலோ
பேதமுறு துக்கமறும் உயர்கீர்த்தி யானியாம்
பேசுதி ரணமா மதனில்
தழையுமுட் பிரமையாம் பல்லவ வணைக்கண்
தருபாக்கி யங்கள் எய்தும்
சாற்றுபெண் வசியந் தருப்பைதா ருவின்முத்தி
தருமணிக் கம்ப ளமதில்
செழிதருஞ் சித்திகள் நலந்தரும் எனச்சுருதி
செப்பினாய் உலகம் உய்ய
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.