செபம்செய்யும் இடமும் திக்குகளின் சிறப்பும்!
ADDED :3795 days ago
கோலமுறு பஞ்சாட்ச ராதிசெப தானமும்
குலவு தன்மனை யிற்செயிற்
கூறுபயன் ஒன்றுபத் தாவுறும் கோட்டமுட்
குளிர்வனந் தன்னில் நூறு
சீலமுறு வாவிதனில் ஆயிரம் இலக்கநதி
தீரத்தில் உயர்கி ரிதனில்
செய்தபயன் ஒருகோடி யாலயத்து இருகோடி
திகழ்பதின் கோடி மான்முற்
காலனை யுதைத்தபர மேசநின் திருமுன்
கணக்கறும் அனந்த கோடி
கருதுவசி யந்துக்கம் மேசநின் திருமுன்
கணக்கறும் அனந்த கோடி
கருதுவசி யந்துக்கம் அறுமாபி சாரமே
கனவித்து வேட ணநிதி
சீலரிகல் உச்சாட னஞ்சாந்தம் வீடுகீழ்த்
திசைமுதற் பயன தென்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.