புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் பிரதுர்பாவோத்சவம்!
ADDED :3763 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவில் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி பிரதுர்பாவோத்சவம் நடந்தது. முன்னாக ரகோத்தம ஆச்சார் தலைமையில் ரமேஷ் ஆச்சார், ராகவேந்திர ஆச்சார் உள்ளிட்ட ஆச்சார்கள் சிறப்பு யாகம் மேற்கொண்டனர். தொடர்ந்து மிருத்திகா பிருந்தாவனத்திற்கு பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி கணேசன் குடும்பத்தினர், ராகவேந்திரர் தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன், பேராசிரியர் உதயசூரியன், கதிர்வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.