திரவுபதியம்மன் கோவிலில் 10ம் தேதி தீமிதி திருவிழா!
ADDED :3795 days ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா 10ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 6ம் தேதி காலை திருமஞ்சனம், மாலையில் பகாசூரனுக்கு அன்னமளித்தல், கரக திருவிழா சுவாமி வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி அம்மன் யானை வாகனத்தில் வீதியுலா, 8ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 9ம் தேதி சுவாமி வீதியுலா, 10ம் தேதி பகல் 12:00 மணிக்கு படுகளம், மாலையில் தீமிதி திருவிழா சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மக்கள் செய்து வருகின்றனர்.