மேலும் செய்திகள்
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
3723 days ago
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா
3723 days ago
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் முன்னிட்டு நேற்று பரமதத்தர் செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. பரமதத்த செட்டியார் பட்டுவேட்டி, முத்துமாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு நேற்று மாலை அழைத்து வரப்பட்டார். முன்னதாக விநாயகர் கோவிலில் சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பாரம்பரியப்படி மாப்பிள்ளையான பரமதத்தர் செட்டியாருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது. உபயதாரர்களான மாப்பிள்ளை வீட்டார் முன்செல்ல பரமத்தர் செட்டியார் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடந்தது. இன்று காலை புனிதவதியார் தீர்த்த குளத்தில் புனிதநீராடும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்படத்தில் எழுந்தருளம் நிகழ்ச்சி நடக்கிறது. 10.40 மணிக்கு காரைக்கால் அம்மையார் - பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு திருமண முடிந்த காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதி உலா நடைபெறுகிறது. நாளை(1ம் தேதி) அதிகாலை பிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திக்குக்கும் மகா அபிஷேகமும், காலை 9 மணிக்கு சிவபெருமான் அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதி உலா நடக்கும். அச்சமயம் பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் தனி அதிகாரி ஆசைத்தம்பி சிறப்பாக செய்து வருகின்றனர்.
3723 days ago
3723 days ago