சிந்தாத்திரை அன்னை கோவில் திருத்தேர்ப்பவனி கோலாகலம்
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த செம்போடை தூய சிந்தாத்திரை மாதா திருத்தேர் பவனி வெகு சிறப்பாக நடந்தது.வேதாரண்யம் அடுத்த செம்போடையில் உள்ள தூய சிந்தாத்திரை மாதா கோவில் ஆண்டு பெருவிழா கடந்த ஜீலை ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள்நடந்த திருவிழாவில், கடினல்வயல் பங்கு தந்தை வின்சென்ட் தலைமையில், மாதாவின் கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது.விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் நடந்த திருப்பலியில், கடினல்வயல் பங்குதந்தை வின்சென்ட், பட்டுக்கோட்டை புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பங்கு தந்தை அம்போன்ஸா, பங்கு தந்தை ஜஸ்டின், புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை லில்லி உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் மாதாவின் தேர் பவனி நடந்தது. இதில் பெண்கள் மற்றும் பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அன்னை யை வழிப்பட்டனர். திருத்தேர் பவனியில், பஞ்சாயத்து தலைவர் புனித மணிவண்ணன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் மதியழகன் உட்பட செம்போ டை, புஷ்பவனம், தேத்தாக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் பங்கே ற்றனர். தேர்பவனியை முன்னி ட்டு வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.