உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்!

அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்!

முருக்கேரி: திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 28ம்  தேதி மாலை 6:00 மணிக்கு கிக்னேசுவர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், விசேஷ மூலிகை பூஜைகளுடன் முதற்கால யாக  பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜைகள், கோ பூஜை, அஷ்ட திரவ்ய ஹோமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை  நடந்தது.  காலை 10:15 மணிக்கு, முருக்கேரி சீனுவாசசாமிகள் மற்றும் திண்டிவனம் நாகராஜ் குருக்கள் குழுவினர்  கோபுர கலசத்திற்கு புனித நீர்   ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து 10:30 மணிக்கு பூரணி பொற்கலை, அய்யனாரப்பன்,  விநாயகர்,  முருகன்,   கன்னிமார்கள் ஆகிய சிலைகளை பிரதிஷ்டை செய்து வைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !