குலசேகரப்பட்டி சாஸ்தா கோயிலில் தோரண வாயில் திறப்பு
திருநெல்வேலி : குலசேகரப்பட்டி சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயில் தோரண வாயிலை கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் திறந்து வைத்தார். பாவூர்சத்திரம் அருகில் உள்ள குலசேரப்பட்டியில் சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் புதிதாக தோரண வாயில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய தோரண வாயிலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பூரணம் பொற்கொடி அம்மன் உடன் சிவஞான வெளியப்பர் சாஸ்தா, தவசி தம்பிரான், பேச்சியம்மன், பிரம்மராக்கு, தளவாய் மாடசாமி ஆகிய தெய்வங்களுக்கு வேள்வி பூஜை, கணபதி பூஜை, கலச பூஜை, தீர்த்த அபிஷேகம் ஆகியவை நடந்தது. விழாவில் பாளை.,நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா, மலேசியா தொழிலதிபர் செல்லையாத்தேவர், திரைப்பட இயக்குனர் பாரதிகண்ணன், குலசேகரப்பட்டி பஞ்., தலைவர் மணிவண்ணன், குலசேகரப்பட்டி முன்னாள் பஞ்., தலைவர் இளங்கோ, பஞ்., உறுப்பினர் மாயாண்டி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.