சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா!
ADDED :3848 days ago
திருப்புல்லாணி: இந்திராநகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 13 வது ஆண்டு முளைக்கொட்டு உற்சவ விழா நடந்தது. இதையொட்டில கடந்த ஜூன் 26 ல் காப்புக்கட்டி முத்துப்பரப்புதல் நிகழ்ச்சியும், நேற்று பால்குடம், இளநீர் காவடி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பூஜாரி புல்லாணி, தலைவர் முருகேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.