உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருபெயர்ச்சியை முன்னிட்டு சேலம் தட்சணாமூர்த்தி கோவில் பூஜை

குருபெயர்ச்சியை முன்னிட்டு சேலம் தட்சணாமூர்த்தி கோவில் பூஜை

சேலம்: குருபெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று சேலம் - திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தட்சணாமூர்த்தி கோவிலில் நடந்த சிறப்பு யாகம், பூஜையில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.நள்ளிரவு 1.03 மணி அளவில், குருபகவான் கடக ராசியில் இருந்து சிம்மராசிக்கு இடபெயர்ச்சி அடைந்தார். இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சேலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், பரிகார பூஜைகள், யாகங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேலம் - திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தட்சணாமூர்த்தி கோவிலில், குருபெயர்ச்சி சிறப்பு மகா யாக வேள்வியும், சிறப்பு அபிஷேகத்தில், குருபகவானுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

* சேலம், அழகாபுரம், மிட்டாபுதூர், ஒட்டங்கரட்டில் பெரியாண்டிச்சி அம்மன், பெருமாள், முருகன் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நடந்த சிறப்பு யாகத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !