இலஞ்சி பெருமாள் கோயிலில் இன்று திருக்கல்யாணம்
ADDED :5224 days ago
தென்காசி : இலஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று (12ம் தேதி) வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது.இலஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலையில் லட்சார்ச்சனை துவங்கியது. மதியம் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் சிறப்பு சமய சொற்பொழிவு, இரவு லட்சார்ச்சனை நிறைவு, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று (12ம் தேதி) காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் வருஷாபிஷேகம் நடக்கிறது. சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில் திருக்கல்யாணம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்துள்ளனர்.