நைனார்மண்டபம் நாகமுத்துமாரியம்மன் வீதியுலா!
ADDED :3773 days ago
புதுச்சேரி: நைனார்மண்டபம் நாகமுத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 19ம் தேதி நடக்கிறது. கடந்த 9ம் தேதி முதல் முத்து மாரிய ம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. முத்துமாரியம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் – விசாலாட்சி அம்மனுக்கு நேற்று சிறப்பு பூ ஜைகள் நடந்தன. நாகமுத்து மாரியம்மன், முருகர் வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்திகளின் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிற ப்பு அதிகாரி பழனிசாமி மற்றும் ஆலய அர்ச்சகர்கள் பரமேஸ்வர குருக்கள், கிருஷ்ணமூர்த்தி செய்து வருகின்றனர்.