புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே புத்து மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் புத்து மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி கடந்த 13ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரார்பணம், சிவாச்சார்ய ரக்ஷாபந்தனம், கலாகர்ஷனம், முதல்கால மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தினமான நேற்று இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி, கடம் புறம்பாடு முடிந்து காலை 10:15 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ஓங்காரநந்தா சுவாமிகள், கோகுலாச்சாரி சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பு.முட்லூரை சுற்றுள்ள கிராமங்களில் இருந்து ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ராம அனுமான் தர்ம பரிபாலன அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு ஊராட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி, கல்யாணம், அறக்கட்டளை செயலர் செந் தமிழ்ச்செல்வி ராமதாஸ் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.