மாரியம்மன் கோவிலில் நாளை ஆடி பிரமோற்சவ கொடியேற்றம்!
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி பிரமோற்சவ கொடியேற்ற உற்சவம் நாளை (17ம் தேதி) நடக்கிறது. இதனையொட்டி மாரியம்மனுக்கு அன்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆடி உற்சவ கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கோவில் பூசாரிகள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இரவு வீதியுலா, காத்தவராயன் கதை சொற்பொழிவும் நடக்கிறது. 21ம் தேதி தெருவடைச்சான், 26ம் தேதி திருத்தேரோட்டமும், 27ம் தேதி அக்கினி சட்டி எடுத்தல், பக்தர்கள் தீ மிதி விழா நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அரங்காவலர் தலைவர் வீராசாமி, அறங்காவலர்கள் கலியமூர்த்தி, செல்லதுரை, நாகரத்தினம் மற்றும் ÷ காவில் பூசாரிகள் செய்கின்றனர்.