நாகமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :3822 days ago
புதுச்சேரி: நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்றிரவு நடந்தது. புதுச்சேரி அடத்த நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 32ம் ஆண்டு செடல் உற்சவ திருவிழா கடந்த 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நடந்தன. 17ம் தேதி செடல் உற்சவம் நடந்தது. நேற்றிரவு நாகமுத்து மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி பழனிசாமி தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.