புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி!
ADDED :3931 days ago
கடலூர்: கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்தது. கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயத் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் தேர் பவனி, திருப்பலி மறையுரை நடந்தது. நேற்று முன்தினம் காலை உபவாச தியானம், மாலை திருப்பலி மறையுரையைத் தொடர்ந்து ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. நேற்று காலை திருப்பலி, திருவிழா திருப்பலி, மாலை கொடியிறக்கம் நடந்தது.