உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மரக்காணம்: செட்டிக்குப்பம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிக்குப்பம் கிராமத்தில் முத்தாலம்மன், பாலகணபதி, பாலமுருகன், முத்தால்ராயன் பரிவாரங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி கடந்த 19ம் தேதி காலை 9:00 மணிக்கு தேவதா, அனுக்ஞை, கணபதி, நவகிரக, மகாலட்சுமி ஓமங்கள் நடந்தன. தொடர்ந்து கோ பூஜை, தனபூஜை டந்தது.மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம் உள்ளிட்ட மகா தீபாராதனைகள் நடந்தது. மறு நாள் (20ம் தேதி) காலை 8 மணிக்கு சிறப்பு சாந்தி, யாக சாலை பூஜை துவங்கியது. அக்கினி யாகம், இரண்டாம் கால யாக பூஜை, மகா தீபாராதனை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து 21ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை அஷ்ட பந்தனம் சாத்துதல், யந்திரபிரிதிஷ்டை யாத்திரா தானம் நடந்தது. காலை 9:00 மணிக்குவிமான கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு முத்தாலம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் புதுச்சேரி சிதம்பரகுருக்கள், நடாதூர் ஜனார்த்தன சவாமிகள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, மரக்காணம்போலீசார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !