முனியப்பன் கோவில் விழா கோலாகலம்
ADDED :3734 days ago
ஓமலூர்: ஓமலூர், வடமனேரிகோடி முனியப்பன் கோவில் திருவிழா, கோலாகலமாக நடந்தது. ஓமலூர் அடுத்த, கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்துக்காடு பகுதியில், வடமனேரிகோடி ஏரிப்பகுதியில், காவல் தெய்வமாக நூறாண்டு பழமையான, காவல் பட்டறை முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி, முதல் திங்கள் கிழமையில், விழா நடத்தப்படும். அதன்படி, 18 பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள், நேற்று முன்தினம் இரவு, முனியப்பன் ஸ்வாமிக்கு, ஆடு, மாடு பலியிட்டு, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.