பொன்னமராவதி அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
ADDED :3733 days ago
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி, ஏனக்காட்டு, அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு காட்டுப்பட்டியில், நேர்த்திக்கடனுக்காக மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள் மற்றும் பல்வேறு ஸ்வாமி சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் காட்டுப்பட்டி, வெள்ளையாண்டிபட்டி கிராம மக்கள் வழிபாடு செய்யப்பட்ட குதிரைகள் மற்றும் பரிவார தெய்வச் சிலைகளை சுமந்து சென்று, அருகில் உள்ள ஏனக்கருப்பர் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர்.இதில், சுற்றுப் பகுதிகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கலந்து கொண்டனர்.