உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை ௩௧ல் தேரோட்டம் நடக்கிறது. கோயிலில் நேற்று காலை கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பல்லக்கில் எடுத்து வரப்பட்டது. சிறப்பு பூஜைகள், தீபாராதனை முடிந்து கொடியேற்றம் நடந்தது. காலை ௧௧ மணிக்கு தேருக்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். விழாவையொட்டி தினமும் காலை பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பெருமாள் அருள்பாலிப்பார். ஜூலை ௨௮ல் மோகினி அவதாரம், ௨௯ல் பூச்சப்பரம், ௩௧ல் காலை ௬ முதல் ௭ மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. அன்றிரவு பூப்பல்லக்கில் பெருமாள் புறப்பாடு நடக்கும். ஆக., ௧ல் சாற்று முறையும், ௨ல் உற்சவ சாந்தியும் நடக்கிறது. ஆக., ௧௪ல் ஆடி அமாவாசை விழா நடக்கிறது. தக்கார் வெங்கடாச்சலம், நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செல்லத்துரை மேற்பார்வையில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !