மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.3.60 கோடியில் புனரமைப்பு பணி!
மதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.3.60 கோடி மதிப்பில் புனரமைப்புப்பணி நடக்கிறது.மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தின் மேல்பகுதியில் நான்கு திசைகளிலும் துாண்கள், மேற்கூரைகள் வலுவிழந்து காணப்பட்டன. அவற்றை புரனமைப்பு செய்ய கோயில் நிர்வாகம் ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கியது. முதற்கட்டமாக கிழக்கு, தெற்குப்பகுதியில் உள்ள பழமையான துாண்கள், மேற்கூரையின் கல்பலகைகள் அகற்றப்பட்டன. அவற்றிற்கு பதிலாக 25 அடி உயரம் கொண்ட துாண்கள், 15 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட கல்பலகைகள் அமைக்க கற்கள் தேர்வு நடந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கொய்ரா என்ற இடத்தில் இருந்து துாண்கள் மற்றும் கற்கள் தேர்வாகி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இப்பணி துவங்கியது.
கலைநயமிக்க அழகிய சிற்பங்கள் நிறைந்த துாண்களை செதுக்கும்பணி மீனாட்சி அம்மன் கோயில் தெற்காடி வீதியில் துவக்கப்பட்டது. ஸ்தபதி குமரகுருபரன் தலைமையில் சிற்ப கலைஞர்கள் துாண்கள், கல்துாண்களை செதுக்கினர். பொற்றாமரைக்குளம் தெற்குப்பகுதியில் உள்ள துாண்கள், மேற்கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றிற்கு பதிலாக புதிதாக செதுக்கப்பட்ட துாண்கள், மேற்கூரை கல்பலகைகள் பொருத்தப்பட்டன. இப்பணி முழுமையாக முடிந்து புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. கிழக்குப்பகுதியில் புதிய துாண்கள், கல்பலகைகள் பொருத்தும்பணி 70 சதவீதம் முடிந்துள்ளது. கிழக்கு பகுதியில் பணிகள் முடிந்ததும் அடுத்ததாக மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் புனரமைப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்குப்பகுதியில் புதிய துாண்கள், கல்பலகைகள் பொருத்தும்பணி 70 சதவீதம் முடிந்துள்ளது. கிழக்கு பகுதியில் பணிகள் முடிந்ததும் அடுத்ததாக மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் புனரமைப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.