அம்மன் கோவிலில் நாளை தீமிதி திருவிழா
ADDED :3767 days ago
கீழ்நல்லாத்துார்: மணவாள நகர் அடுத்த, கீழ்நல்லாத்துாரில் உள்ளது தான்தோன்றி அம்மன் கோவில். இங்கு, இரண்டாமாண்டு தீமிதி திருவிழா, நாளை மாலை, 5:00 மணிக்கு, பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.ஆக., 1ம் தேதி அம்மனுக்கு படையல் வைத்தல் நிகழ்ச்சியும், ஆக., 2ம் தேதி சிறப்பு அபிஷேகமும், கூழ் ஊற்றுதலும், மாலை, 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறும். அதன்பின் இரவு, 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெறும்.